ADVERTISEMENT

UAE: வெப்பநிலை குறைவு.. பகல் நேரங்களில் தூசி.. இன்றைய நாளின் வானிலை நிலவரம்..!!

Published: 9 May 2022, 9:00 AM |
Updated: 9 May 2022, 9:04 AM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது தூசிப்புயல் உருவாகி வரும் நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, அமீரகத்தில் இன்றும் வானிலை தூசி நிறைந்ததாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்றைய வானிலை முன்னறிவிப்பில் பகலில் தூசி நிறைந்ததாக இருக்கும் என்றும், வெப்பநிலை ஓரளவு குறைந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான வேகத்தில் வீசும் வடமேற்குக் காற்று, சில சமயங்களில் வலுவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கடலுக்கு அருகில் வீசக்கூடிய காற்றால் தூசி மற்றும் மணல் எங்கும் வீசி பகலில் கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் பகல் நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்கள் தூசி நிறைந்த சூழல் உருவாகும் போது கவனத்துடன் ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.