ADVERTISEMENT

உலகின் சிறந்த விமான நிறுவனம் என தொடர்ச்சியாக 9-வது முறை பெயரெடுத்துள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்..!!

Published: 11 May 2022, 10:55 AM |
Updated: 11 May 2022, 11:00 AM |
Posted By: admin

துபாயை தளமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன், பயணம் தொடர்பான விருதான பிசினஸ் டிராவலர் மிடில் ஈஸ்ட் விருதுகள் மூலம் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘சிறந்த வணிக வகுப்புடன் கூடிய விமான நிறுவனம்’ (Airline with the ‘Best Distinguished Business Class’),  ‘‘சிறந்த வணிக வகுப்பைக் கொண்ட விமான நிறுவனம் (Airline with the Best Business Class)’ மற்றும் ‘சிறந்த அடிக்கடி பறக்கும் திட்டம் (Best Frequent Flyer Programm) ஆகிய மூன்று விருதுகளையும் இந்த விமான நிறுவனம் பெற்றுள்ளது.

சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் விமான நிறுவனத்தின் முன்முயற்சிகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள முதலீடுகள் மூலம் எமிரேட்ஸின் சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காகவும், ‘ஃபிளை பெட்டர் (fly better)’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றியதற்காகவும் இந்த சமீபத்திய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு, தடையற்ற மற்றும் பாதுகாப்பான வாடிக்கையாளர் பயணத்தை உறுதிசெய்வதற்கும், ஒட்டுமொத்த விமான பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப விருப்பங்களை வழங்குவதற்கும் விமான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளை ஏர்லைன்ஸ் தொடர்ந்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.