ADVERTISEMENT

துபாய்: இன்றுடன் முடிவடையும் மாபெரும் நிகழ்வான குளோபல் வில்லேஜ்..!!

Published: 7 May 2022, 8:21 PM |
Updated: 7 May 2022, 8:21 PM |
Posted By: admin

துபாயில் குளோபல் வில்லேஜின் 26 வது சீசன் இன்று நிறைவடைய இருப்பதை முன்னிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குளோபல் வில்லேஜிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு குளோபல் வில்லேஜின் 26 வது சீசன் முற்று பெறுகிறது.

ADVERTISEMENT

குளோபல் வில்லேஜின் 26 வது சீசனை முன்னிட்டு 26 பெவிலியன்களில் உலகெங்கிலும் உள்ள 80 க்கும் மேற்பட்ட கலாச்சாரங்களை எடுத்துக்காட்டும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 10 ம் தேதி அன்றே முடிவடையவிருந்த இந்த மாபெரும் நிகழ்வானது முதன் முறையாக தான்கு வாரங்கள் நீட்டிக்கப்பட்டு மே மாதம் வரை நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக ஈத் அல் ஃபித்ரின் பிரம்மாண்ட கொண்டாட்டங்களும் இங்கு அரங்கேறின.

ADVERTISEMENT

குளோபல் வில்லேஜிற்கு வருகை புரிய ஆன்லைனில் 15 திர்ஹம் அல்லது நேரடியாக சென்றால் 20 திர்ஹம் கட்டணம் செலுத்தி நுழைவதற்கான டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையுடன் முடிவடையும் குளோபல் வில்லேஜ் இனி தனது 27 வது சீசனை இந்த வருட அக்டோபர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.