ADVERTISEMENT

ஈத் அல் ஃபித்ர் தொடங்கும் நாளை அறிவித்த வளைகுடா நாடுகள்..!!

Published: 1 May 2022, 7:43 AM |
Updated: 1 May 2022, 9:02 AM |
Posted By: admin

வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்த வருடத்தின் ஈத் அல் ஃபித்ர் தொடங்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஏப்ரல் 30 (நேற்று) சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் குழுவானது ஈத் அல் ஃபித்ரின் துவக்கத்தைக் குறிக்கும் ஷவ்வால் மாத பிறை தென்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு இறுதியில் பிறை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று ரமலான் மாத கடைசி நாள் என்றும் மே 2, திங்கள் கிழமை ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

சவூதியை போன்றே அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாடுகளில் பிறை தென்படவில்லை என குறிப்பிட்டு ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் திங்கள்கிழமை என அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இதே போன்று ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஈராக் போன்ற நாடுகளும் திங்கள்கிழமை மே 2 அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவிருப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.