அமீரக செய்திகள்

UAE: பாஸ்போர்ட் சேவைகளுக்கான முகாம்களை அறிவித்துள்ள இந்திய துணை தூதரகம்..!!

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மே 22 முதல் தொடர்ந்து இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்-இன் பாஸ்போர்ட் சேவா முகாம்களை ஏற்பாடு செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி முதல் முகாம் மே 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இரண்டாவது முகாம் மே 29 ஞாயிற்றுக்கிழமையும் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள நான்கு BLS International Service Ltd மையங்களில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறும் என தூதரகம் கூறியுள்ளது.

இந்தியர்களின் அவசர கால பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த பாஸ்போர்ட் சேவா முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த முகாம்களுக்கு செல்ல விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நான்கு இடங்களில் தேவையான ஆவணங்களுடன் வாக்-இன் அடிப்படையில் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை வழங்கப்படும் என்றும் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் துணைத் தூதரகம் அவசரகால தேவையுடன் உரிய ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கே இந்த சேவை வழங்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் பின்வரும் பிரிவினரின் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை

  • அவசரகால வழக்குகள் (மருத்துவ சிகிச்சை, இறப்பு)
  •  காலாவதியாகிவிட்ட பாஸ்போர்ட் அல்லது ஜூன் 30க்குள் காலாவதியாக கூடிய பாஸ்போர்ட்,
  • ரீஸ்டாம்ப், காலாவதியான அல்லது ரத்து செய்யப்பட்ட விசாக்கள் அல்லது புதிய வேலைக்கான விசாவைப் பெறுவது போன்றவற்றால் அவசரமாக பாஸ்போர்ட் புதுப்பித்தல்.
  • NRI சான்றிதழ்கள் (கல்வி நோக்கங்களுக்காக),
  • போலீஸ் அனுமதிச் சான்றிதழ்கள் (வேலைவாய்ப்பு அல்லது குடியேற்ற நோக்கங்களுக்காக),
  • இந்தியாவிற்குச் செல்லும் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் புதுப்பித்தல் அல்லது வெளிநாடுகளில் மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்.

மேற்கூறப்பட்ட நிபந்தனை உள்ளவர்கள் மட்டுமே தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முகாம்களில் சென்று சேவை பெறலாம் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி டோக்கன் பிற்பகல் 1.30 மணிக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பின்வரும் மையங்கள் பாஸ்போர்ட் சேவா முகாம்களாக செயல்படும்:

>> அல் கலீஜ் சென்டர்: யூனிட் எண் 118 -119, M ஃப்ளோர் அல் கலீஜ் சென்டர், அல் அய்ன் சென்டருக்கு எதிரே, மன்கூல் சாலை, (பர் துபாய் (பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு) (Unit no 118 -119, Mezzanine floor Al Khaleej Center, Opposite Al Ain Center, Mankhool Road, Bur dubai)

>> தேரா சிட்டி சென்டர்: கடை எண் # 13, தரை தளம், ஜீனா பில்டிங் மற்றும் பட்ஜெட் ரென்ட் அ கார் பில்டிங், தேரா சிட்டி சென்டர் P3 பார்க்கிங்கிற்கு எதிரே, தேரா (Shop No# 13, Ground Floor, Zeenah Building, Same building of Budget Rent a Car, Opposite to Deira City Center P3 Parking, Deira)

>> துபாய் பிரீமியம் லவுஞ்ச் மையம்: 507, ஹபீப் பேங்க் AG ஸூரிச் அல் ஜவாரா பில்டிங், பேங்க் ஸ்ட்ரீட், ADCM வங்கிக்கு அடுத்து, பர் துபாய் (507, Habib Bank AG Zurich Al Jawarah Building, Bank Street, Next to ADCB Bank, Bur Dubai)

>> ஷார்ஜா HSBC மையம்: அலுவலகம் எண்.11, M ஃப்ளோர், அப்துல் அஜீஸ் மஜித் பில்டிங், கிங் ஃபைசல் ஸ்ட்ரீட், HSBC வங்கியின் அதே கட்டிடம், ஷார்ஜா (Office No.11, Mezzanine Floor, Abdul Aziz Majid Building, King Faisal Street, Same Building of HSBC Bank, Sharjah)

Related Articles

Back to top button
error: Content is protected !!