ADVERTISEMENT

UAE: டிரக் ஓட்டுநராக இருக்கும் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 12 மில்லியன் திர்ஹம்ஸை அள்ளிக் கொடுத்த பிக் டிக்கெட்..!!

Published: 4 May 2022, 2:08 PM |
Updated: 4 May 2022, 2:08 PM |
Posted By: admin

அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பிக் டிக்கெட் டிராவின் ஏப்ரல் மாதத்திற்கான குலுக்கலில் இந்தியாவை சேர்ந்த முஜீப் சிரத்தோடி என்பவர் முதல் பரிசுத் தொகையான 12 மில்லியன் திர்ஹம்ஸை வென்றுள்ளார். பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவின் இந்த வெற்றியானது அஜ்மானில் வசித்து வரும் முஜீபிற்கு கிடைத்ததன் மூலம் இது அவருக்கு ஈத் அல் ஃபித்ரின் மிகப்பெரிய பரிசாக அமைந்துவிட்டது.

ADVERTISEMENT

அமீரகத்தில் டிரக் ஓட்டுநராக பணிபுரியும் முஜீப் சிரத்தோடி 229710 என்ற டிக்கெட்டை வைத்து நேற்று (ஏப்ரல் 3) நடைபெற்ற குலுக்கல்லில் இந்த மெகா பரிசை வென்றுள்ளார். அவர் உட்பட அவரின் நண்பர்கள் 9 பேர் சேர்ந்து வெற்றிக்கான இந்த டிக்கெட்டை அவர் பெயரில் வாங்கியதாகவும், இந்த பரிசு தொகையை அவரின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் முஜீப் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், பணத்தேவையால் கடந்த ஓராண்டாக டிக்கெட் வாங்கி வருவதாகவும், டிக்கெட் வாங்க பங்களிப்பு செய்தவர்களில் எட்டு பேர் இந்தியர்கள் என்றும் மற்ற இரண்டு பேர் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

நேற்று நடைபெற்ற டிராவில் முதல் பரிசு தவிர்த்து இரண்டாவது பரிசுத் தொகையான 1 மில்லியன் திர்ஹம்ஸ் விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் என்பவருக்கும், மூன்றாவது பரிசுத் தொகையான 100,000 திர்ஹம்ஸ் ஜெயப்பிரகாஷ் நாயருக்கும், நான்காவது பரிசுத் தொகையான 50,000 திர்ஹம்ஸ் இப்ராஹிம் ஃப்ரீஹாத் என்பவருக்கும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.