ADVERTISEMENT

ஓமானில் தென்பட்ட பிறை..!! ஈத் அல் ஃபித்ரை உறுதி செய்த பிறை பார்க்கும் குழு..!!

Published: 2 May 2022, 2:13 AM |
Updated: 2 May 2022, 2:13 AM |
Posted By: admin

ஓமானில் ஷவ்வால் மாத பிறை பார்க்கப்பட்டதால் திங்கள்கிழமை ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை இரவு பிறையை பார்க்குமாறு ஓமானின் பிறை பார்க்கும் குழு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பிறை தென்பட்டதால் ஈத் அல் ஃபித்ர் மே 2 கொண்டாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓமானின் இந்த அறிவிப்பால் மற்ற வளைகுடா நாடுகளான சவூதி, அமீரகம், குவைத், கத்தார் போல ஓமானும் மே 2 ஈத் அல் ஃபித்ரை கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT