ADVERTISEMENT

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு அடுத்த நீண்ட விடுமுறை எப்போது..?? எத்தனை நாட்கள் விடுமுறை..?? சிறு பார்வை..!!

Published: 4 May 2022, 3:37 PM |
Updated: 4 May 2022, 4:16 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் குடியிருப்பாளர்களுக்கு நீண்ட விடுமுறை என்பது குறிப்பிட்ட சில கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவ்வாறு இந்த வருடத்தின் முதலாவது மிக நீண்ட விடுமுறையானது மே 2 ம் தேதி கொண்டாடப்பட்ட ஈத் அல் பித்ர் தினத்தை முன்னிட்டு தனியார் துறை சார்ந்த ஊழியர்களுக்கு
ஐந்து நாட்கள் எனவும், பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒன்பது நாட்கள் எனவும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விடுமுறையானது தனியார் துறை ஊழியர்களுக்கு இன்றுடனும், பொதுத்துறை ஊழியர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமையுடனும் முடிவடையவுள்ளது. இருப்பினும், நம்மில் பெரும்பாலோனோர் அமீரகத்தில் அடுத்து வரக்கூடிய விடுமுறை நாட்களை எதிர்பார்த்து கொண்டிருப்போம். அவ்வாறு வரக்கூடிய நாட்களில் அடுத்த நீண்ட விடுமுறை எப்போது வரும் என்பது பற்றி இங்கே காண்போம்.

அமீரகத்தை பொறுத்தவரை முஸ்லிம்களின் அடுத்த இரண்டாவது பெரிய பண்டிகையான ஈத் அல் அத்ஹா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நினைவு தினம் மற்றும் அமீரக தேசிய தினம் ஆகியவற்றில் குடியிருப்பாளர்கள் நீண்ட விடுமுறைகளை அனுபவிப்பார்கள். இதில் ஈத் அல் அத்ஹா மற்றும் தேசிய தினத்திற்கு நான்கு நாட்கள் என நீண்ட விடுமுறை கிடைக்கும்.

ADVERTISEMENT

வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் அடுத்த நான்கு நாள் ஈத் அல் அத்ஹா விடுமுறையானது இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ரி காலண்டரின்படி, துல்ஹஜ் மாதம் 9 முதல் 12 வரை இருக்கும் என அறியப்படுகிறது. அதாவது ஆங்கில காலண்டரின்படி ஜூலை 9 ம் தேதி சனிக்கிழமை முதல் ஜூலை 12 ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை தனியார் துறைகளுக்கு நான்கு நாள் நீண்ட விடுமுறையாக இருக்கும்.

இதற்கு அடுத்ததாக இஸ்லாமிய புத்தாண்டிற்காக ஜூலை 30 ஆம் தேதி சனிக்கிழமையும், முஹமது நபி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 8 ஆம் தேதி சனிக்கிழமையும் குடியிருப்பாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறையை அனுபவிக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் தொடர் விருமுறையாக இருக்கும்.

ADVERTISEMENT

அடுத்து இந்த வருடத்தின் மூன்றாவது நீண்ட விடுமுறையானது அமீரகத்தின் நினைவு தினம் மற்றும் அமீரக தேசிய தினம் ஆகியவற்றிற்காக டிசம்பர் 1 ம் தேதி வியாழக்கிழமை முதல் டிசம்பர் 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை என நான்கு நாட்களாக இருக்கும்.