ADVERTISEMENT

DEWA கட்டணம் செலுத்தினால் பரிசா..?? அமீரக குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த துபாய் எலெக்ட்ரிசிட்டி அண்ட் வாட்டர் அத்தாரிட்டி..!!

Published: 18 May 2022, 9:12 PM |
Updated: 19 May 2022, 8:56 AM |
Posted By: admin

துபாயில் கடந்த சில நாட்களாக அமீரக குடியிருப்பாளர்களை குறிவைத்து DEWA எனப்படும் துபாய் எலெக்ட்ரிசிட்டி அண்ட் வாட்டர் அத்தாரிட்டி பெயரில் மோசடி கும்பல் போலி செய்திகளை பரப்பி வருகிறது. அதில் DEWA விற்கான கட்டணங்களை செலுத்துங்கள் பரிசுகளை அள்ளுங்கள் என்ற தலைப்பில் போலி இணையதள முகவரி மூலம் குடியிருப்பாளர்களுக்கு மோசடி செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இது குறித்து DEWA இன்று புதன்கிழமை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மோசடி செய்திகள் குறித்து கவனமாக இருக்குமாறு குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது. அதில் இந்த மின்னஞ்சல்கள் dewa.gov.ae என்ற டொமைனில் (domain) இருந்து அனுப்பப்படவில்லை என்றும், பெரும்பாலும் மோசடி இணையதளங்களுக்கான இணைப்புகளை இந்த மின்னஞ்சல்கள் உள்ளடக்கியது என்றும் DEWA கூறியுள்ளது.

மேலும் இதுபோன்ற போலி செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் அல்லது அவற்றில் உள்ள எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், மின்னஞ்சல் முகவரியின் டொமைன் பெயரை எப்போதும் சரிபார்க்குமாறும் அனைத்து வாடிக்கையாளர்களையும், சமூக உறுப்பினர்களையும் DEWA கேட்டுக்கொள்கிறது என்றும் அந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.

ADVERTISEMENT

உண்மை தகவல்களை அறிய, DEWA இன் அதிகாரப்பூர்வ இணையதளம், அதன் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் அல்லது 04 601 9999 என்ற எண்ணில் உள்ள வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தை எப்போதும் அணுகுமாறு வாடிக்கையாளர்களை துபாய் எலெக்ட்ரிசிட்டி அன்ட் வாட்டர் அத்தாரிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT