ADVERTISEMENT

UAE: மறைந்த அமீரக அதிபர் ‘மாண்புமிகு ஷேக் கலீஃபா’ பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு..!!

Published: 14 May 2022, 11:27 AM |
Updated: 14 May 2022, 11:37 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் நேற்று மே 13 வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார். அமீரகத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகித்த மறைந்த மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது பற்றிய சில தகவல்களை நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.

ADVERTISEMENT

அபுதாபி எமிரேட்டிற்கு உட்பட்ட அல் அய்னில் உள்ள அல் முவைஜி கோட்டையில் 1948 ஆம் ஆண்டு பிறந்த அமீரக அதிபரின் முழுப்பெயர் “கலீஃபா பின் சையத் பின் சுல்தான் பின் சையத் பின் கலீஃபா பின் ஷக்பூத் பின் தய்யிப் பின் இஸ்ஸா பின் நஹ்யான் பின் ஃபலாஹ் பின் யாஸ்” ஆகும். அதாவது அமீரக அதிபரின் தந்தை, தந்தையின் தந்தை, அவரது தந்தை என மூதாதையர்களின் பெயர்களையும் உள்ளடக்கி அழைக்கப்படும் அமீரக அதிபரின் குடும்பம் “அல் நஹ்யான் குடும்பம்” என்றே பொதுவாக அழைக்கப்படும்.

இவர் மறைந்த அமீரகத்தின் தந்தை மாண்புமிகு ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் மூத்த மகன் ஆவார். இவரது தாயார் ஷேக்கா ஹெஸ்ஸா பின்த் முகமது பின் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் ஆவார். ஆரம்ப காலத்தில் தனது பள்ளிக் கல்வியை அல் அய்னில் தனது தந்தையால் கட்டப்பட்ட நகரின் முதல் பள்ளியில் பெற்றுள்ளார். மேலும் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை அல் அய்ன் மற்றும் அல் புரைமி பகுதியில் தனது தந்தையுடன் செலவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

நிர்வாக பொறுப்பு

1966 ம் ஆண்டின் போது தனது 18 வயதில், அபுதாபி நகரின் கிழக்கு மாகாணத்தில் தனது தந்தையின் பிரதிநிதியாகவும், அதன் சட்ட அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் கிழக்கு மாகாணத்தில் அபுதாபியின் ஆட்சியாளரின் பிரதிநிதியாகவும், ஆகஸ்ட் மாதம் அதன் சட்ட அமைப்பின் தலைவராகவும் ஆனார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அதிபராக வருவதற்கு முன்பே மாண்புமிகு ஷேக் கலீபா அவர்கள் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அபுதாபியின் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட முக்கிய செயலாக்க திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளார்.

அல் அய்னில் அவரது குறிப்பிடத்தக்க வெற்றி, பொது சேவையில் ஒரு நீண்ட வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்துள்ளது. இதனால் ஷேக் கலீஃபா அவர்களால் தனது தலைமைப் பொறுப்பை எளிதாகவும் திறமையாகவும் ஏற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில், ஷேக் கலீஃபா பல முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். அவர் தனது மறைந்த தந்தையின் அரசாங்கத்தின் முக்கிய நிர்வாகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் உள்ளூர் மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் அனைத்து முக்கிய திட்டங்களையும் செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் பொறுப்பையும் நிர்வகித்துள்ளார்.

அதன்படி 1969-ம் ஆண்டு அபுதாபியின் பட்டத்து இளவரசராக ஷேக் கலீஃபா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதற்கு அடுத்த நாளே அவர் அபுதாபியில் பாதுகாப்புத் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அபுதாபி பாதுகாப்புப் படைகள் (ADDF) அமைப்பதை அவர் மேற்பார்வையிட்டுள்ளார். இதுவே பின்னர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் மையமாக மாறியது.

அதன் பிறகு 1971-ம் ஆண்டு அவர் அபுதாபியின் பிரதமராகவும், பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சராகவும், பின்னர் 1974 ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீ்ரகத்தின் இரண்டாவது மத்திய அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளளார். அதன் பிறகு 1976 ம் ஆண்டி்ல் ஷேக் கலீஃபா அவர்கள் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படையின் துணை உச்ச தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர் இதே ஆண்டில், வரவிருக்கும் தலைமுறைகளுக்கு நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்வதற்காக எமிரேட்டின் நிதி முதலீடுகளை நிர்வகித்துவரும் அபுதாபி முதலீட்டு ஆணையத்தை நிறுவுவதற்கும் அவரே பொறுப்பு வகித்துள்ளார். பின்னர் இறுதியாக நவம்பர் 2, 2004 அன்று அவரது தந்தை ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் இறந்த பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்று முதல் தான் இறக்கும் வரை அமீரகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியும் வந்துள்ளார்.

ஷேக் கலீஃபாவின் வழிகாட்டுதலின் கீழ், நிர்வாகக் குழு அபுதாபியில் வீடுகள், நீர் வழங்கல் அமைப்பு, சாலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட விரிவான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிட்டு வந்துள்ளது. இதுவே அபுதாபி நகரத்தை தற்போது நாம் காணக்கூடிய நவீன நகரமாக உருவாக்க வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புர்ஜ் துபாய் புர்ஜ் கலீஃபாவாக பெயர் மாற்றம்

கடந்த 4 ஜனவரி 2010 அன்று, உலகின் மிக உயரமான கட்டிடமான முதன் முதலில் புர்ஜ் துபாய் என்று அறியப்பட்ட கட்டிடம் கட்டி முடிக்கும் தருணத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க அபுதாபி துபாய்க்கு 10 பில்லியன் டாலரை வழங்கிய்து. இதனையடுத்து, அவரது நினைவாக அந்த கட்டிடமானது புர்ஜ் கலீஃபா என மறுபெயரிடப்பட்டது.

உடல்நிலை பாதிப்பு

ஜனவரி 2014 இல், ஷேக் கலீஃபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டடு அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருந்து அன்றாட அரசு விவகாரங்களில் ஈடுபடுவதை அவர் நிறுத்திக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது சகோதரரும் அபுதாபியின் தற்போதைய மகுட இளவரசருமண மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் அபுதாபி எமிரேட்டின் மாநில பொது விவகாரங்கள் மற்றும் தினசரி முடிவெடுக்கும் அதிகாரத்தை கவனித்து வந்தார்.

மறைந்த ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்கள் அடக்கத்துடனும் தாராள மனப்பான்மை உடையவராகவும் மற்றும் அவரது மக்கள் மீது ஆர்வமுள்ளவராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் அதிகாரப்பூர்வ பணிகள் மற்றும் பிற நிகழ்வுகள் மூலம் மக்களை அடிக்கடி நேரடியாக தொடர்புகொள்வதற்காக அவர் அமீரக மக்களிடம் புகழ் பெற்றவராகவும் திகழ்ந்துள்ளார்.

நேர்மையான மற்றும் விரைவான தலைமைத்துவ திறமைக்காக மக்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்களை, உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலில் பட்டியலிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் (Forbes) அறிக்கை வெளியிட்டிருந்தது. இறுதியாக அவரது உடல் அபுதாபியின் அல் பதின் பகுதியில் உள்ள கல்லறையில் அமீரக தலைவர்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.