அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி, துணைத் தலைவர், ஆட்சியாளர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஷேக் முகமது ட்விட்டரில் அமீரக குடிமக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பதிவில் “ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி, துணைத் தலைவர், ஆட்சியாளர்கள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈத் அல்-ஃபித்ர் வாழ்த்துகள். கடவுள் நம் தேசத்திற்கு தொடர்ந்து மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் அளித்து பிராந்தியம் மற்றும் உலகிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் வழங்குவானாக.” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நாட்டின் வளர்ச்சி, சாதனைகள் மற்றும் ஆதாயங்கள் தொடர ஜனாதிபதி, மேதகு ஷேக் கலீஃபா நல்ல ஆரோக்கியத்துடன் மற்றும் நல்வாழ்வுடனும் இருக்க அவர் வாழ்த்தினார் என்று அமீரக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான முன்னேற்றம், செழிப்பு மற்றும் வளர்ச்சியை வழங்க எல்லாம் வல்ல இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.