ADVERTISEMENT

மக்களுக்கு ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்களை தெரிவித்த துபாய் ஆட்சியாளர்..!!

Published: 1 May 2022, 3:24 PM |
Updated: 1 May 2022, 3:24 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது பற்றி அவர் வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு ஆண்டும், அமீரகம் மற்றும் அரேபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி வருகின்றனர்… எங்கள் இதயங்கள் மிகவும் அன்பாகவும், சகிப்புத்தன்மையுடனும், அமைதியுடனும் உள்ளன… ஒவ்வொரு ஆண்டும் எங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அனைவருக்கும் ஈத் நல்வாழ்த்துக்கள் மற்றும் இறைவன் எங்களின் அனைத்து நல்ல செயல்களையும் ஏற்றுக்கொள்வார்” என்று கூறியுள்ளார்.

சனிக்கிழமை இரவு ஷவ்வால் பிறை தென்படாததை அடுத்து மே 2 அன்று ஈத் அல் ஃபித்ரை ஐக்கிய அரபு அமீரகம் கொண்டாடவுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் அனைவருக்கும் பாதுகாப்பான ஈத் கொண்டாட்டங்களை உறுதி செய்வதற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் கடைப்பிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.