ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று 44 டிகிரி செல்சியஸைத் தொடும் வெப்பநிலை..!! வானிலை மையம் தகவல்..!!

Published: 5 May 2022, 9:21 AM |
Updated: 5 May 2022, 9:21 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வெப்பநிலையானது படிப்படியாக அதிகரித்து, சில உள் பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸைத் தொடும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும் காற்று பகல் நேரத்தில் தூசி மற்றும் மணலை வீசும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவுநிலை குறையும் என்பதால் கவனமாக வாகனங்களை ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த சில நாட்களாகவே அமீரகத்தில் வீசும் காற்றினால் தூசி மற்றும் மணல்புயல் பரவலாக உருவாகி வருகிறது. அதே போல் வெப்பநிலையும் அதிகரித்துக் கொண்டே வருவதும் குறிப்பிடத்தக்கது.