ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி மே 14 (இன்று) முதல் மே 16 வரை நகரில் உள்ள பொது வாகன நிறுத்தங்களில் வாகன ஓட்டிகள் இலவசமாக தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் இந்த கட்டண பார்க்கிங்கானது மே 17 அன்று நகரம் முழுவதும் அமலுக்கு வரும் என கூறியுள்ளது.
இருப்பினும் 7 நாள் பார்க்கிங் மண்டலங்களுக்கு (7 day parking zones) இந்த இலவச பார்க்கிங் பொருந்தாது என்று முனசிபலிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை நீல நிற பார்க்கிங் அடையாளங்களால் கண்டறியலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி சனிக்கிழமையன்று அனைத்து பூங்காக்களும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது. நகரத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் அருகிலுள்ள பூங்காக்கள் மே 14 முதல் மே 16 வரை மூடப்படும் என்றும் மே 17 முதல் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
மறைந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமைச்சகங்கள், மத்திய மற்றும் உள்ளூர் துறைகள் மற்றும் தனியார் துறைகளில் பணியை நிறுத்தி வைத்துள்ளதற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.