ADVERTISEMENT

UAE: சாலையின் நடுவே திடீரென வாகனம் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட விபத்து..!! காவல்துறை வெளியிட்ட திகிலூட்டும் வீடியோ..!!

Published: 6 May 2022, 8:27 PM |
Updated: 6 May 2022, 8:34 PM |
Posted By: admin

அபுதாபி காவல்துறை, சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டும் வகையில் ஏற்பட்ட பல வாகன விபத்துக்களின் அதிர்ச்சியூட்டும் புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் ஒரு கார் மெதுவாகச் சென்று, சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டது. இதனை அறியாமல் பின்னே வந்து கொண்டிருந்த ஒரு வேன் அதன் மீது மோதியுள்ளது. இந்த மோதலின் காரணமாக முன்னே சென்று கொண்டிருந்த காரும் விபத்துக்குள்ளாகி அதனைத் தொடர்ந்து மற்றொரு வாகனமும் அதில் மோதியது.

இந்த தொடர் மோதலினால், நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வீடியோவானது சாலையின் நடுவில் திடீரென ஒரு வாகனம் நிறுத்தப்பட்டால் ஏற்படும் அபாயம் குறித்த எச்சரிக்கையை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ADVERTISEMENT

அபுதாபி போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு காவல்துறை இயக்குநரகம் எக்காரணம் கொண்டும் சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. அத்துடன் மற்றவர்களின் பாதுகாப்பு கருதி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பான இடத்தில் வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வாகனத்தை ஓட்ட முடியாத பட்சத்தில், ஓட்டுனர் துறையின் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு ஆதரவைப் பெற வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல், மற்ற பயணிகளுடன் பேசுதல், புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட கவனத்தை சிதறடிக்கும் செயல்களில் பங்கேற்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

போக்குவரத்துச் சட்டத்தின்படி, வாகனம் ஓட்டும் போது, ​​சாலையில் கவனம் சிதறும் வாகன ஓட்டிகளுக்கு 800 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.