ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் கலீஃபா இன்று மரணம்..!!

Published: 13 May 2022, 3:09 PM |
Updated: 13 May 2022, 3:16 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் மே 13 வெள்ளிக்கிழமை (இன்று) காலமானார் என்று ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்த ஒரு அறிக்கையில் “ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார்.

ADVERTISEMENT

1971 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் உருவானதில் இருந்து  நவம்பர் 2, 2004 இல் இறக்கும் வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபராக பணியாற்றிய அவரது தந்தை மறைந்த மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்குப் பிறகு அவர் அமீரகத்தின் ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948 இல் பிறந்த மாண்புமிகு ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், அபுதாபி எமிரேட்டின் 16 வது ஆட்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் ஷேக் சயீதின் மூத்த மகன் ஆவார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரான பிறகு, ஷேக் கலீஃபா மத்திய அரசு மற்றும் அபுதாபி அரசாங்கத்தின் பெரிய மறுசீரமைப்புக்கு தலைமை தாங்கினார். அவரது ஆட்சியின் கீழ், ஐக்கிய அரபு அமீரகம் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.