அமீரகத்தில் இன்று (மே 29) ஞாயிற்றுக்கிழமை வானிலையானது சில நேரங்களில் தூசி நிறைந்ததாகவும், வெப்பமாகவும், இருக்கும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) படி, அமீரகத்தில் இன்று அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரப்பதமானது 85 சதவீதத்தை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,
மேலும் இன்றைய வானிலை நிலவரப்படி, அமீரகம் முழுவதும் பலத்த காற்று மீண்டும் வீசக்கூடும் என்றும், பொதுவாக மணிக்கு 15-35 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக பகல் நேரங்களில் அதிகளவு தூசி வீசும் என்பதால் கவனத்துடன் ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமீரகத்தில் கோடைகாலம் தொடங்கி வருவதால் கடந்த சில நாட்களாகவே அமீரகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையானது ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து செப்டம்பர் மாதம் நடுப்பகுதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.