ADVERTISEMENT

அமீரகத்தில் முதன்முறையாக அறிமுகமாகும் “ஹாட் ஏர் பலூன்” சவாரி..!! கட்டணம் வெறும் 75 திர்ஹம் மட்டுமே..!!

Published: 19 May 2022, 5:50 PM |
Updated: 19 May 2022, 6:01 PM |
Posted By: admin

அமீரகத்தில் இதுவரை இல்லாத ஹாட் ஏர் பலூன் சவாரியை முதன் முறையாக ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு மால் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து சுற்றுலாவாசிகளையும் குடியிருப்பாளர்களையும் கவர பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகப்படுத்தி வரும் ராஸ் அல் கைமாவில் தற்பொழுது மற்றொரு சிறப்பம்சமாக இந்த ஹாட் ஏர் பலூன் பயணம் அறிமுகமாகியுள்ளது. இந்த பலூன் ஒரே நேரத்தில் இரண்டு பெரியவர்கள் பயணிக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது 30 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து, கடற்கரைகள், பாலைவனங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் மலைகளின் 360 டிகிரி காட்சிகளை வழங்குகிறது.

ADVERTISEMENT

ராஸ் அல் கைமாவில் இருக்கும் மனார் மால் (Manar Mall) மற்றும் ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (RAKTDA) இணைந்து அறிவிக்கப்பட்ட ‘RAK ஏர்வென்ச்சர்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் இந்த ஹாட் ஏர் பலூன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பலூனில் பயணிக்க 10 நிமிடத்திற்கு 75 திர்ஹம் கட்டணம் ஆகும். மேலும் இது தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஸ் அல் கைமாவில் கிடைக்கும் பல  சாகச அனுபவங்களில் இதுவே முதன்மையானது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில், ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையம் அதன் விமானநிலையத்தை புதிய விமான சாகச சுற்றுலா வணிகமான Actionflight Aviation LLCக்கான செயல்பாட்டு தளமாக நிறுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏரோபாட்டிக் விமானங்கள், ஸ்கை டைவிங் மற்றும் ஹாட் ஏர் பலூனிங் போன்ற செயல்பாடுகளை நிறுவனம் தொடங்கும் என கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

முன்னதாக அளித்த பேட்டியில், ஆக்ஷன் ஃபிளைட் ஏவியேஷன் நிறுவனத்தின் CEO மற்றும் விமான இயக்க இயக்குநரான வெய்ன் ஜாக், அதன் ஹாட் ஏர் பலூன் சுமார் ஒரு மணி நேரம் பறக்கும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் அதில் 24 பயணிகள் வரை பயணம் செய்யுமளவு கொள்ளளவு கொண்டதாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.