ADVERTISEMENT

அபுதாபியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் காயம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பெண்ணின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு..!

Published: 25 Jun 2022, 11:53 AM |
Updated: 25 Jun 2022, 2:37 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அபுதாபியில் இருக்கும், அல் ஜாஹியா பகுதியில் உள்ள 30 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்களை மீட்டு காப்பாற்றுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு காயம் ஏற்பட்ட போதிலும் அதனை பொருட்படுத்தாது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிந்துள்ளார். அவரின் இந்த துணிச்சலான செயலுக்காக அவர் பலரின்  பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

தீ விபத்தின்போது குடியிருப்பளர்களை மீட்கும் பணியின் ஈடுபட்டுக் கொண்டிருந்த இமான் அல் சஃபாக்சி என்ற இந்த பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் பின் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார்.

இது குறித்து தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான அலி சயீத் அல் நெயாடி, பாதிக்கப்பட்டவ்ரகளை காப்பாறிய இமான் என்பவரின் துணிச்சலான செயலைப் பாராட்டி வாழ்த்தினார். மனிதநேயம் மற்றும் துணிச்சலான இத்தகைய செயல்கள் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும் அல் நெயாடி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT