ADVERTISEMENT

UAE: ஒரு மாத காலத்திற்கு மூடப்படும் ஷார்ஜாவின் அல் மினா ஸ்ட்ரீட்..!!

Published: 7 Jun 2022, 4:59 PM |
Updated: 7 Jun 2022, 5:05 PM |
Posted By: admin

ஷார்ஜாவில் போர்ட் காலித் செல்லும் திசையில் உள்ள அல்-மினா ஸ்ட்ரீ்ட், சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒரு மாதம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 9, வியாழன் முதல் ஜூலை 4 வரை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு இந்த தெரு மூடப்படும் என்று ஷார்ஜா சாலை போக்குவரத்து ஆணையம் (SRTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து SRTA வெளியிட்ட அறிவிப்பில், “ஜூன் 9 வியாழன் முதல் ஜூலை 4 திங்கள் வரையிலான காலகட்டத்தில் பராமரிப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் பணிகளுக்கான போர்ட் காலித் செல்லும் திசையில் இருக்கும் அல்-மினா ஸ்ட்ரீட் முழுவதுமாக மூடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.