ADVERTISEMENT

அமீரகத்தில் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை அறிவிப்பு..!

Published: 30 Jun 2022, 1:23 PM |
Updated: 30 Jun 2022, 1:23 PM |
Posted By: admin

அமீரகத்தில் உள்ள மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ ஈத் அல் அதா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஈத் விடுமுறையானது நான்கு நாட்களாகும்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையன் (FAHR) கூறுகையில், மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை 4 என நாட்கள் என்றும் ஜூலை 12ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் ஜூன்30 ஆம் தேதியான இன்று துல் ஹஜ் மாதத்தின் முதல் தேதியாகவும், ஜூலை 9 ஆம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாட இருப்பதாகவும், ஜூலை 8 ஆம் தேதி அரஃபா தினம் என்றும் உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT