ADVERTISEMENT

அமீரகம் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. கோவையில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தின் நேரம் மாற்றம்..!

Published: 20 Jun 2022, 8:10 PM |
Updated: 20 Jun 2022, 8:10 PM |
Posted By: admin

கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக ஷார்ஜா விமானத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டன ஓடுதள பராமரிப்பு பணிகள் காரணமாக இரவு 10:00 மணிக்குள் அனைத்து விமான சேவைகளும் முடிவடையும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. கோவையில் இருந்து ஷார்ஜா இடையே இயக்கப்படும் ‘ஏர் அரேபியா’ விமானம் அதிகாலை 3.30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 4.15 மணியளவில் புறப்பட்டு செல்கிறது.

ADVERTISEMENT

ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக கடந்த 16ஆம் தேதி முதல் ‘ஏர் அரேபியா’ விமானம் இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 6.30 மணிக்கு விமானம் தரையிறங்கி மீண்டும் காலை 7.20 மணி அளவில் ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் ஐந்து நாட்கள் கோவையில் இருந்து ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களை பெற ‘ஏர் அரேபியா’ ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT