ADVERTISEMENT

UAE: விதிமுறைகளை மீறும் குடியிருப்பாளர்களால் மீண்டும் பரவும் கொரோனா.. 3000 திர்ஹம்ஸ் அபராதம்..!!

Published: 14 Jun 2022, 10:41 AM |
Updated: 14 Jun 2022, 10:41 AM |
Posted By: admin

அமீரகத்தில் தினசரி கொரோனா நோய் தொற்றின் பாதிப்புகள் ஒரு வாரத்தில் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஜூன் 2022 இன் தொடக்கத்தில் தினசரி நோய்த் தொற்றுகள் சராசரியாக 450 ஆகவும், ஜூன் 13 அன்று 1,300 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் 3,000-க்கும் மேற்பட்ட தினசரி நோய்த் தொற்றுகளுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் 200-க்கும் குறைவான கொரோனா பாதிப்புகள் இருந்தது, இருப்பினும் இம்மாதத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளன.

அமீரகத்தின் சில குடியிருப்பாளர்கள் கோவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று செய்ததித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். உட்புறப் பகுதிகளில் முகக்கவசம் அணியத் தவறியது இதில் அடங்கும். கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறவோருக்கு 3,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் எச்சரித்தார்.

ADVERTISEMENT

முகக்கவசம் அணிவது கோவிட் -19 பரவலைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன, குறிப்பாக மூடிய இடங்களிலும் கூட்டம் நெரிசலான இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டயமாகும். கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் பெற்ற நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதில்லை. இதனால் சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமான (NCEMA) அதிகாரி கூறியுள்ளார்.

துபாயில், கோவிட் பாசிட்டிவ் பெற்ற நோயாளிகள் 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவதாலே தினசரி கொரோனா பாதிப்பின் அதிகரிப்புக்குக் காரணமாகும். நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, பயணத்தின் போது சிறப்பு கவனம் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து கோவிட் விதிகளையும் பின்பற்றுமாறு அமீரகத்தின் செய்தித் தொடர்பாளர் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

அமீரகத்தின் ஹீரோக்கள் இன்னும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறார்கள். தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் நாடு அடைந்த மாபெரும் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அமீரக அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.