ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் தென்பட்ட துல் ஹஜ் பிறை.. ஜூலை 9 பெருநாளாக அறிவிப்பு..!

Published: 30 Jun 2022, 7:51 AM |
Updated: 30 Jun 2022, 1:23 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் ஜூன் 30 ஆம் தேதியான இன்று துல் ஹஜ் மாதத்தின் முதல் தேதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வழக்கப்படி துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளில் ஈத் அல் அத்ஹா பண்டிகை கொண்டாடப்படும்.

ADVERTISEMENT

அதன்படி, ஜூலை 9 ஆம் தேதி ஈத் அல் அத்ஹாவாக இருக்கும். புதன்கிழமையான நேற்று துல் கைதாவின் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜூலை 8 ஆம் தேதி அரஃபா தினமாக இருக்கும்.

துல் ஹிஜ் மாதத்தில் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். இந்த பயணம் ஈத் அல் அத்ஹா பண்டிகையோடு முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT