ADVERTISEMENT

UAE: உலகின் மிகவும் விலை உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்ற துபாய்..!

Published: 28 Jun 2022, 6:46 PM |
Updated: 28 Jun 2022, 6:46 PM |
Posted By: admin

ஒவ்வொரு வருடமும் Julius Baer’s Global Wealth and Lifestyle Report என்கிற ஆய்வுக்குழு உலகளவிலான மதிப்புள்ள நபர்களை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இக்குழுவின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையில், உலகின் 14வது விலை உயர்ந்த நகரமாக துபாய் இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

(High Net Worth Individuals) HNWI விலையுயர்ந்த நகரத்தின் அடிப்படையில் சீனாவின் ஷாங்காய் நகரம் முதலிடத்திலும், அதனையடுத்து லண்டன், தைபே, ஹாங்காங், சிங்கப்பூர், மொனாக்கோ, சூரிச், டோக்கியோ, சிட்னி மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் உள்ளன.

அமீரகத்தில் பணவீக்க அழுத்தங்கள் உள்ளபோதிலும், துபாய் நகரம் பயணம் மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சியில் அதிகரித்துள்ளதாக சிவிஸ் வங்கி கூறியுள்ளது. மேலும் அமீரகத்தின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை உலக மக்களையும், சுற்றுலா வாசிகளையும் கட்டி இழுக்கிறது என்றும் சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT