அமீரகத்தின் துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் சமீபத்திய அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாவது: துபாய் EXPO 2020 கண்காட்சி நடைபெற்ற இடத்தை புது நகரமாக மாற்ற இருப்பதாகவும், அது துபாயின் அழகை பிரதிபலிக்கும் பகுதியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
துபாயில் உருவாக்கப்படும் இப்புதிய நகரம் அக்டோபர் 1 அன்று திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் அலுவலகங்கள், உணவு, ஓய்வு வசதிகள், விளையாட்டு வசதிகள், பொழுதுபோக்கு இடங்கள், மால் ஆகியவற்றுகள் உருவாக்கப்படும். துபாய் மெட்ரோ மூலம் செல்லக்கூடிய வசதியும், உலகத் தரம் வாய்ந்த துபாய் கண்காட்சி பகுதியாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா, லக்சம்பர்க், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, மொராக்கோ மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பெவிலியன்களும் இப்புதிய பகுதியில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.