ADVERTISEMENT

DUTY FREE LUCKY DRAW: பரிசு மழையில் இந்தியர்கள்.. மில்லியரான 62 வயது முதியவர்..!

Published: 28 Jun 2022, 8:06 AM |
Updated: 28 Jun 2022, 8:06 AM |
Posted By: admin

துபாய் DUTY FREE லக்கி டிராவில் இந்தியர் ஒருவர் சூப்பரான MERCEDES காரையும், மற்ற இந்தியர்கள் BMW பைக்குகளையும் வென்று அசத்தியுள்ளனர். துபாய் Duty-Free Lucky Draw போட்டி ஒன்றை நடத்தி வருகின்றது. Millennium Millionaire என்கிற பெயரில் இந்த போட்டியை அது நடத்தி வருகின்றது. வாடிக்கையாளர்கள் லக்கி டிராவிற்கான டிக்கெட்டை தனியாக பணம் கொடுத்து பெற வேண்டும்.

ADVERTISEMENT

அப்படி டிக்கெட்டை வாங்குவோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இறுதியில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். அதுபோன்று சமீபத்தில் நடந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் மிகப்பெரிய பரிசுகளை வென்றுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஜான் வர்கீஸ் என்ற 62 வயதான முதியவர் ஒருவர் மில்லியனராக மாறியுள்ளார். அவருக்கு முதல் பரிசாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 7.83 கோடி ஆகும்.

வெற்றிகுறித்து முதியவர் ஜான் வர்கீஸ் கூறியதாவது, “என்னுடைய வாழ்நாளில் ஒரு முறைகூட இதுபோன்று பரிசுகளை நான் வென்றதில்லை. இதுவே என் வாழ் நாளின் முதல் மற்றும் மிக முக்கியமான பரிசு” என தெரிவித்தார். இதேபோல் மற்றொரு இந்தியர் விலையுயர்ந்த காரையும், துபாயில் வசிக்கும் இன்னும் இரண்டு இந்தியர்கள் பைக்கையும் பரிசாக வென்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த லக்கிய டிரா போட்டியில் 40 வயதான திம்மையா நஞ்சப்பா என்பவர், விலைய உயர்ந்த (Mercedes-AMG CLS 53 4MATIC) சொகுசு காரை பரிசாக வென்றுள்ளார். மேலும் மற்ற இந்தியர்களான ஜமைல் ஃபோனஸ்கா மற்றும் ஷாகித் அபித் என்ற இருவரும் BMW பைக்குகளை பரிசாக வென்றுள்ளனர்.