ADVERTISEMENT

அமீரகத்தின் 12 இடங்களில் நடக்கும் இந்திய துணைத் தூதரகத்தின் பாஸ்போர்ட் சேவை முகாம்..!

Published: 20 Jun 2022, 10:40 AM |
Updated: 20 Jun 2022, 10:43 AM |
Posted By: admin

துபாயில் வருகிற ஜூன் 26-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள 12 BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் மையங்களில் இந்திய துணைத் தூதரகம் பாஸ்போர்ட் சேவை முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் மற்றும் அதன் தொடர்பான முக்கிய ஆவணங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய பாஸ்போர்ட் சேவை முகாம் நடத்த முடிவு செய்யதுள்ளது.

இந்த சேவையின்போது, விண்ணப்பதாரர்கள் தங்களின் பாஸ்போர்ட் மற்றும் இதர சேவைகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் BLS இணையதளத்தில் முன்பதிவு செய்துருக்குமாறு துணை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தட்கல் போன்ற அவசரகால வழக்குகளான மருத்துவ சிகிச்சை, இறப்பு, புதிதாகப் பிறந்த குழந்தை, மூத்த குடிமக்கள், அவசரகால சான்றிதழ்கள், அவுட் பாஸ்கள் என வாக்-இன் மூலமாக வரும் விண்ணப்பதாரர்களின் ஆவணச் சான்ற்தழ்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்திய மிஷன் கூறியுள்ளது. ஒய்த் தொட்ரபான ஏதேனும் சந்தேகங்களுக்கு, பிரவாசி பாரதிய சஹாயதா கேந்திரா கட்டணமில்லா எண்: 80046342 அல்லது passport.dubai@mea.gov.in என்ற இணையதளம் அல்லது vcppt.dubai@mea.gov.in என்ற ஈமெயிலை தொடர்புக்கொண்டு தெளிவடைந்துக் கொள்ளலலாம் என்றும் இந்திய மிஷன் தெரிவித்துள்ளது.

ஜூன் 26 அன்று திறக்கப்படும் BLS மையங்கள்:

  • அல் கலீஜ் மையம், அலுவலகம் எண் 118-119, Mezzanine floor, அல் ஐன் மையத்திற்கு எதிரே, மன்கூல் சாலை, பர் துபாய் (பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு).
  • டெய்ரா சிட்டி சென்டர், அலுவலகம் எண் 13, ஜீனா கட்டிடம், தேரா துபாய்.
  • பிரீமியம் லவுஞ்ச் மையம், அலுவலகம் எண் 507, ADCB வங்கி அருகே, பர் துபாய்.
  • ஷார்ஜா HSBC மையம், அலுவலகம் எண் 11, Mezzanine floor, அப்துல் அஜீஸ் மஜித் கட்டிடம், கிங் பைசல் தெரு, HSBC வங்கி கட்டிடம், ஷார்ஜா.
  • இந்தியன் அசோசியேஷன் ஷார்ஜா, மெகா மால் ரவுண்டானாவ அருகே, அல் மனாக் பகுதி, KMCC மையம், 201, Choithrams Dubai Tower, பனியாஸ் Square, தேரா துபாய்.
  • அலுவலகம் எண்: 14 – அல் அப்துல் லத்தீஃப் அல் ஜரூனி கட்டிடம், கிங் பைசல் சாலை, உம் அல் குவைன்.
  • IT கம்ப்யூட்டர் கிராஸ், தஹான் சாலை, ராஸ் அல் கைமா.
  • இந்திய நிவாரணக் குழு, நக்கீல் சாலை, ராஸ் அல் கைமா.
  • இந்திய சங்கம் அஜ்மான், ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் சாலை, அல் ஜுர்ஃப் இண்டஸ்ட்ரியல் ஏரியா 3, அஜ்மான்.
  • இந்தியன் சோஷியல் கிளப் ஃபுஜைரா, அல் ஃபாசில் சாலை, ஹில்டன் ஹோட்டல், ஃபஸீல், ஃபுஜைரா.
  • இந்தியன் சோஷியல் கிளப் கோர்ஃபக்கான், இந்திய பள்ளிகூடம் அருகே, கப்பா, கோர்ஃபக்கான்.