ADVERTISEMENT

குவைத் விசிட் விசாக்கள் நிறுத்தி வைப்பு.. உள்துறை அமைச்சகம் தகவல்..!

Published: 28 Jun 2022, 1:43 PM |
Updated: 28 Jun 2022, 1:43 PM |
Posted By: admin

குவைத்தில் ஜூன் 27ஆன நேற்று முதல் குடும்ப விசா, சுற்றுலா விசா மற்றும் விசிட் விசா வழங்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குவைத் செய்தி நிறுவனமான (KUNA) அறிவித்துள்ளது. விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளுடன் ஒரு புதிய வழிமுறையை உருவாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய நடவடிக்கையானது, குவைத்தின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் அஹ்மத் நவாஃப் அல் அஹ்மத் அல் சபாவின் அறிவுறுத்தலின் படி  எடுக்கப்பட்டதாகவும், விசா வழங்கும் செயல்முறையை ஒழுங்கமைப்பத்தி ஒரு புதிய வழிமுறையைத் தயாரிக்க விவகாரத் துறை செயபட இருப்பதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.