அமீரக மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகமான (MoHRE) ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை கட்டுமானத் தளங்கள் போன்ற நேரடி சூரிய ஒளிபடும் நிலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த விதியின் கீழ், கடுமையான வெயில் நிலவும் இந்த கால கட்டத்தில், தொழிலாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நேரடி சூரிய ஒளியில் தொழிலாளர்கள் பணி செய்ய மதியம் 12:30 முதம் 3 மணி வரை அனுமதிக்கப்படாது.
மதிய இடைவேளை விதியை மீறும் நிறுவனங்கள் மீது, ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். மதிய இடைவேளையை மீறி பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால், அதிகபட்சமாக 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படலாம்.
வேலை தடை தொடர்பான விதி மீறல்கள் குறித்து புகார் அளிக்க திங்கள் முதல் சனி வரை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, அமைச்சகத்தின் அழைப்பு மையத்தின் 600590000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இது தொடர்பான அதிகார அமைப்பின் செயலியில் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.