ADVERTISEMENT

UAE: விரைவில் திருமணம் செய்துகொள்ள இருந்த இந்தியருக்கு அடித்த மெகா ஜாக்பாட்..!

Published: 10 Jun 2022, 6:15 PM |
Updated: 10 Jun 2022, 8:35 PM |
Posted By: admin

துபாயில் 79 வது மஹ்சூஸ் ரேஃபில் டிராவில் இந்தியர் ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்று அசத்தியுள்ளார். துபாயில் உள்ள ஒரு வாசனை திரவிய மற்றும் ஆபரண கடையில் பங்குதாரராக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த முகமது என்பவர் மஹ்சூஸ் டிராவில் 100,000 திர்ஹம்ஸ் வென்றுள்ளார்.

ADVERTISEMENT

முகமது, ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதால், சரியான நேரத்தில் வென்றுள்ளதாக கூறினார்.

வெற்று பெற்றது குறித்து முகமது கூறுகையில், “நான் வெற்றி பெற்றதாக மஹ்சூஸிடமிருந்து ஒரு மெயில் வந்தது, அதை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த பணத்தை சரியான தருணத்தில் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது திருமண செலவுகளைத் தவிர, என் அம்மாவுக்கு தங்க பரிசு வழங்க விரும்புகிறேன்”என்றார்.

ADVERTISEMENT

முகமது தனது வணிகத்தை வளர்க்க வெற்றி பெற்ற தொகையில் சிலவற்றை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாசனை திரவியக் கடையில் 5 ஆண்டுகளாக பங்குதாரராக உள்ளார்.