ADVERTISEMENT

துபாயில் நடைபெற்ற ஆண் அழகன் போட்டியில் Mr. UAE International பட்டத்தை தட்டிச்சென்ற இந்தியர்..!

Published: 30 Jun 2022, 9:41 AM |
Updated: 30 Jun 2022, 9:41 AM |
Posted By: admin

துபாயில் ராடிசன் ஹோட்டலில் Mr & Mrs UAE International அழகு போட்டி நடைபெற்றது. இதில் அமீரகத்தில் வசிக்கும் அனைவரும் கலந்துகொள்ளாலாம். இந்த போட்டியை ஃபேஷன் துறையில் பணியாற்றிய மாடல் மீனா அஸ்ரானியின் Being Muskan நிறுவனம் இந்த போட்டியை நடத்தியது. மீனா அஸ்ரானி, Mrs இந்தியா யுனிவர்ஸ் பிரபலம், Mrs இந்தியா யுனிவர்ஸ் துபாய் என்று சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிபெற்று இருக்கிறார்.

ADVERTISEMENT

இந்நிலையியல் சமீபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அமீரகத்தில் வசிக்கும் இந்தியரான கவுதம் பங்கரா Mr. UAE International 2022 பட்டத்தை வென்றுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு அமீரகத்தில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றில் சிறந்த போட்டியாளராக விருது பெற்றவர் கவுதம் என்பது குறிப்பிடத்தக்கது.