ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை வானிலை வெப்பமாகவும், பகலில் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. சில மேகங்கள் பிற்பகலில் கிழக்கு நோக்கி தோன்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அபுதாபியில் அதிகபட்சமாக 42ºC ஆகவும், துபாயில் 43ºC ஆகவும் வெப்பநிலை பதிவாகும் என்றும் அல் ஐனில் வெப்பநிலை 48ºC ஐ எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் சில கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை ஈரப்பதத்துடன் லேசானது முதல் மிதமான காற்று வீசுவதோடு பகலில் கிழக்கு நோக்கி தூசி வீசும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.