ADVERTISEMENT

தொழிலாளர்களுக்கு ஆரம்பித்த மதிய நேர ஓய்வு இடைவேளை..!! திறந்த வெளிகளில் பணிபுரிய இந்த நேரங்களில் தடை என ஓமான் அறிவிப்பு..!!

Published: 3 Jun 2022, 5:01 AM |
Updated: 3 Jun 2022, 7:53 AM |
Posted By: admin

ஓமானில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக ஜூன் 1, 2022 புதன்கிழமை முதல் ஆகஸ்ட் வரை மதியம் 12:30 மணி முதல் 3:30 மணி வரை கட்டுமானத் தளங்கள் மற்றும் திறந்த பகுதிகளில் வேலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு அதன்படி கடந்த இரண்டு நாட்களாக இந்த நேரங்களில் மதிய நேர ஓய்வு இடைவேளை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில், “ஜூன் 1 தொடங்கி, அதிக வெப்பநிலை காரணமாக கட்டுமான தளங்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் நண்பகல் நேரத்தில் தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான தடை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மதியம் 12:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை இருக்கும்” என்று ஓமன் தொழில் பொது கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுவாகவே வளைகுடா நாட்களில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் மாதங்களில் மதிய நேரத்தில் திறந்த வெளி மற்றும் சூரியனுக்குக் கீழ் பணிபுரிய வேண்டிய தொழில்களானது நிறுத்தப்பட்டு வெயிலின் தாக்கம் குறைந்த பின்னர் மீண்டும் தொழிலாளர்களை பணிபுரிய அனுமதிப்பது வழக்கமான ஒன்றேயாகும்.

ADVERTISEMENT