ADVERTISEMENT

துபாயில் தொழிலாளர்களுக்கு சிறப்பு விளையாட்டு போட்டிகளை நடத்திய காவல்துறை..!

Published: 18 Jun 2022, 1:13 PM |
Updated: 18 Jun 2022, 1:13 PM |
Posted By: admin

துபாயில் 350 தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக விளையாட்டு போட்டிகளை காவல்துறையினர் நடத்தினர். விளையாட்டு தினம் என்பதால் காவல்துறையின் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டது, இதில் பல தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தின் பொது விளையாட்டு விவகாரத்துறை இயக்குநர் கர்னல் அப்துல் பாசித் அலி அப்துல் ரஹ்மான் கூறுயதாவது: “தொழிலாளர்களுக்கன இந்த விளையாட்டு போட்டிகள் துபாய் காவல்துறை தலைமையில் நடத்தப்பட்டது. சமூகத்தில் முக்கியப் பங்காற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

“இந்த விளையாட்டு போட்டியானது உடல் ரீதியான முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியத்தின் விழிப்புணர்வை எற்படுத்தும் போட்டியாக அமைந்துள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது” இவ்வாறு கர்னல் அப்துல் ரஹ்மான் முடித்தார்.

ADVERTISEMENT