ADVERTISEMENT

அமீரகத்தில் நடைபெறும் ராணுவ பாதுகாப்பு பயிற்சிகளை புகைப்படம் எடுக்க குடியிருப்பளர்களுக்கு தடை.. உள்துறை அமைச்சகம் உத்தரவு..!

Published: 20 Jun 2022, 4:17 PM |
Updated: 20 Jun 2022, 4:17 PM |
Posted By: admin

அஜ்மான் மற்றும் உம் அல் குவைனில் பாதுகாப்பு பயிற்சிகளை நடக்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகள் திங்கள்கிழமை அஜ்மானிலும், புதன்கிழமை உம் அல் குவைனிலும் நடைபெறும் என்றும் பயிற்சியின் போது ராணுவப் பிரிவுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இராணுவப் பிரிவனர் பயிற்சிகள் மேற்கொள்ளும்போது பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும், பயிற்சி நடைபெறும் இடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் அமைச்சகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.