ADVERTISEMENT

ஷார்ஜாவில் ஸ்மார்ட் டோல் கேட்களை அறிமுகப்படுத்த ஷார்ஜா நிர்வாகக் குழு ஒப்புதல்..!!

Published: 7 Jun 2022, 8:45 PM |
Updated: 7 Jun 2022, 8:45 PM |
Posted By: admin

ஷார்ஜாவில் போக்குவரத்து நெரிசலை நீக்குவதற்கும், கனரக வாகனங்கள் வாயில்களில் பயன்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் விதமாக புதிதாக ஸ்மார்ட் டிரக் டோல் கேட்களை அறிமுகப்படுத்துவதற்கான வரைவுக்கு ஷார்ஜா நிர்வாகக் குழு (SEC) இன்று செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும் துணை ஆட்சியாளருமான SEC இன் தலைவருமான ஷேக் சுல்தான் பின் முகமது பின் சுல்தான் அல் காசிமி அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக குழு தெரிவித்துள்ளது. ஷார்ஜாவின் இந்த புதிய டிரக் டோல் கேட்களுக்கான மின்னணு அமைப்பு, லாரிகள் நிறுத்தும் நேரத்தைக் குறைக்கவும், நெரிசலைத் தடுக்கவும், இயக்கத்தைக் கண்காணிக்கவும், வாயில்களில் ஏற்படும் பிழைகளைக் குறைக்கவும் உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய வாயில்கள் டிரக் போக்குவரத்தை ஒழுங்கமைக்கவும், கட்டணம் வசூலிக்கவும், சேதமடைந்த சாலைகளை தொடர்ந்து மேம்படுத்தவும், பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பகுதிகளின் விரிவாக்கம் உள்ளிட்ட ஷார்ஜாவில் உள்ள வணிக மையத்தை மதிப்பிடும் அறிக்கையையும் SEC விவாதித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் 2021 ஆம் ஆண்டிற்கான ஷார்ஜா தொழில்முனைவோர் அறக்கட்டளையின் “ருவாத்” சாதனைகள் குறித்த அறிக்கையையும் ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும் துணை ஆட்சியாளருமான SEC இன் தலைவருமான ஷேக் சுல்தான் பின் முகமது பின் சுல்தான் அல் காசிமி அவர்களின் தலைமையிலான இந்த கவுன்சில் மதிப்பாய்வு செய்ததுள்ளதும் குறிப்பிடத்தக்கது.