ADVERTISEMENT

ஷார்ஜா கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டெடுப்பு.. இந்தியர் என ஷார்ஜா காவல்துறை சந்தேகம்..!

Published: 16 Jun 2022, 5:53 PM |
Updated: 16 Jun 2022, 5:53 PM |
Posted By: admin

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் சடலம் ஷார்ஜா கடற்கரையில் இரு சடலம் கிடப்பதாக துப்பரவு தொழிலாளி காவல்துறைக்கு தலவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து ரோந்து அதிகாரிகள், துணை மருத்துவ அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுக் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றது. இறந்தவரின் அடையாள ஆவணம் எதுவும் கிடைக்காத நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ADVERTISEMENT

இந்த சடலம் குறித்த முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் இந்திய குடிமகனாக இருக்கலாம் என்றும், அவர் வேறொரு எமிரேட்டில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும், அவரது உடல் அலைகளால் ஷார்ஜாவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.