துபாயில் செயல்பட்டு வரும் ஒரு சூக் பார்வையாளர்களுக்காக பிரத்யேக மெகா விற்பனையை இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு தரப்பட்ட பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 9 முதல் 19 வரை துபாயின் தேரா ஐலேண்டில் உள்ள வாட்டர்ஃப்ரண்ட் சூக் மற்றும் சந்தையான சூக் அல் மர்ஃபா தனது மெகா விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் நகரத்தில் சிறந்த டீல்களைப் பெறலாம் மற்றும் வாராந்திர மளிகை மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலையில் தள்ளுபடியைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த மெகா விற்பனையின் போது ஃபக்ருதீன், மொஹிதீன், பால்கன், சாஃப்கோ, ஸ்பைர் இன்டர்நேஷனல், ஒமேகா ஸ்பைசஸ், ரஷீத் ஷபீர் டிரேடிங், சோய்த்ரம்ஸ் மற்றும் ஸ்மார்ட் லைன் டிரேடிங் போன்ற 39 முக்கிய மொத்த விற்பனைக் கடைகளில் இருந்து மளிகை பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள், அரிசி, சோப்புகள், ஷாம்பு, துப்புரவுப் பொருட்கள் மற்றும் பலவற்றில் பார்வையாளர்கள் 50% வரை தள்ளுபடி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
அதே போல் ஜூன் 23 முதல் ஜூலை 9 வரை சூக் அல் மர்ஃபாவின் வருடாந்திர மெகா சூக் விற்பனையை பார்வையாளர்கள் எதிர்நோக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வாசனை திரவியங்கள், தோல் பராமரிப்பு மற்றும் பலவற்றில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சூக் அல் மர்ஃபாவின் புதிய இயக்க நேரம் ஞாயிறு முதல் வியாழன் வரை நண்பகல் முதல் நள்ளிரவு வரையிலும், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரையிலும் மற்றும் சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.