ADVERTISEMENT

அமீரகத்தில் 50 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலை..!!

Published: 8 Jun 2022, 9:16 AM |
Updated: 8 Jun 2022, 9:44 AM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் இன்று வெப்பநிலையானது கிட்டத்தட்ட 50°C க்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கருத்துப்படி, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் சராசரியாக வெப்பநிலை 35 இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. துபாயில் தற்போது 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

மேலும் அமீரகத்தில் பலத்த காற்று மீண்டும் மீண்டும் வீசக்கூடும், மணிக்கு 15-30 கிமீ வேகத்தில், சில சமயங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் இந்த காற்று வீசும் என்பதால் தூசி மற்றும் மணலை காற்றில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பகலில், வேகமாக வீசும் காற்றினால் கிடைமட்டத் தெரிவுநிலை பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் கடல் அமைதியாக இருக்கும் எனவும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வானிலை மையம்  எச்சரித்துள்ளது.