ADVERTISEMENT

துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் தவிப்பு..!

Published: 20 Jun 2022, 11:36 AM |
Updated: 20 Jun 2022, 11:36 AM |
Posted By: admin

சென்னையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் உடபட 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. துபாய், டோஹா, ஜெர்மனி, மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் ஐதராபாத், பெங்களூரு திரும்பின.

ADVERTISEMENT

நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை, இடி, மின்னல், காற்று ஓரளவுவிட்ட பின் விமானங்கள் தரை இறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. துபாய், பஹ்ரைன், டோஹா,  சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.