துபாய் பேருந்தில் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தனது பொருட்களை தவறவிட்ட அரை மணி நேரத்தில் காவல்துறையின் சிறப்புக் குழு பொருட்களை கண்டறிந்து உரியரிடம் திருப்பி அளித்துள்ளது.
துபாய் முழுவதும் சுற்றிப் பார்க்க ரஷ்யாவில் இருந்து வந்த பயணி அமீரக பேருந்தில் முக்கிய ஆவணங்களுடன் பொருட்களை தவறவிட்டுள்ளார். இந்த நிலையில்,பொருட்கள் தவறவிடப்பட்டதால் அவர், அமீரக சிறப்புக் குழுவின் கால் செண்டர் மையத்திற்கு தொடர்புக்கொண்டு விவரங்களை வழங்கியுள்ளார். பின்னர் பேருந்துகளை சோதனை செய்ய துபாய் போலீசார், குழு ஒன்றை அமைத்து, இது தொடர்பாக விருவிருப்பான விசாரணையை மேற்கொண்டு தொலைந்த பொருட்களை கண்டெடுக்க ஸ்மார்ட் அமைப்புகளை வரவழைத்தனர்.
இது குறித்து துபாய் சுற்றுலா காவல்துறையின் இயக்குனர் கல்பான் அல் ஜல்லாப் கூறுகையில், சுற்றுலா பயணி 901 என்ற எண்ணான கால் சென்டரர் மையத்திற்கு தொடர்புக்கொண்டு இரண்டு லக்கேஜ்கள், பர்ஸ், மொபைல் ஃபோன், கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் பணங்கள் தொலைந்து போய்விட்டதாக தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து அவரிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் பயணித்த பேருந்தை சிறப்புக் குழு அடையாளம் கண்டு ஓட்டுநரை தொடர்பு கொண்டனர். பின்னர் ஓட்டுநர் அந்த சுற்றுலா பயணியின் பொருட்களை போலீசாரிடம் வழங்கிய நிலை காவல்துறையின் சிறப்புக் குழு 30 நிமிடங்களில் உரியவரிடம் ஒப்படைத்தது. இவ்வாறு துபாய் சுற்றுலா காவல்துறையின் இயக்குனர் கல்பான் கூறினார்.