ADVERTISEMENT

UAE: பள்ளி பேருந்து மீது கார் மோதியதில் இரு மாணவர்கள் பலி..!! பல மாணவர்கள் காயம்..!!

Published: 1 Jun 2022, 8:06 PM |
Updated: 1 Jun 2022, 8:10 PM |
Posted By: admin

அமீரகத்தில் புதன்கிழமை காலை ஃபுஜைராவில் உள்ள அல் சிஜி பகுதியில் பள்ளி பேருந்து மீது கார் மோதியதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்காணிப்பாளர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 4 மற்றும் 6 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் ஷார்ஜாவில் அமைந்துள்ள பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​​​பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் பேருந்து மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒரு ஆதாரத்தின்படி, காயமடைந்தவர்கள் அல் தைத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தற்போது மிதமான மற்றும் சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களில், KG மற்றும் கிரேடு 1 படிக்கும்  இரண்டு சிறுமிகள் மற்றும் கிரேடு 5 இல் படிக்கும் ஒரு பையன் உள்ளிட்டோர் இதில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் பள்ளி நிர்வாகம் இரங்கல் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT