ADVERTISEMENT

UAE: பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவங்களை காண்பிக்கும் அபுதாபி சம்மர் பாஸ்.. ஆன்லைனில் விற்பனை..!

Published: 23 Jun 2022, 5:36 PM |
Updated: 23 Jun 2022, 9:15 PM |
Posted By: admin

பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களைக் காண்பிக்க அபுதாபியின் புதிய சம்மர் பாஸ்கள் ஆன்லைனில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்மர் பாஸ்கள் மூலம் அபுதாபியின் சுவாரஸ்யமான சிறந்த காட்சிகள் மற்றும் அனுபவங்களை ஆகஸ்ட் 31 வரை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம். சம்மர் பாஸை summerpass.visitabudhabi.ae என்ற இணையதளத்தில் பார்வையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த பாஸின் விலை பெரியவர்களுக்கு 599 திர்ஹம்ஸ் ஆகவும், 4 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 499 திரஹம்ஸ் ஆகவும், மூன்று வயது மற்றும் அதற்கும் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி பாஸ் இலவசமாகவும் கிடைக்கும். பாஸ் வைத்திருப்பவர்கள் அபுதாபி Ferrari World மற்றும் தங்களுக்குப் பிடித்த DC சூப்பர் ஹீரோக்களை சந்திக்கலாம். மேலும் Yas Waterworld-இல் ரோல்லர் கோஸ்டர் போன்ற 40-க்கும் மேற்பட்ட சறுக்கு விளையாட்டுகளிலும் பார்வையாளர்கள் பங்குபெற்று மகிழலாம்.

அதுமட்டுமின்றி இந்த சம்மர் பாஸில் அபுதாபியில் உள்ள louvre, அபுதாபி மற்றும் அல் அய்னில் நடக்கவுள்ள 13 கலாச்சார அடையாளங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான தள்ளுபடியும் பார்வையாளர்களுக்கு கிடைக்கும். இதில் கஸ்ர் அல் ஹொஸ்ன், ஹவுஸ் ஆஃப் ஆர்டிசன்ஸ், கஸ்ர் அல் வதன், அல் அய்ன் பேலஸ் மியூசியம், அல் ஜாஹிலி கோட்டை மற்றும் கஸ்ர் அல் முவைஜி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT