ADVERTISEMENT

UAE: இருமடங்கு உயர்ந்த விமான கட்டணம்.. தமிழக பயணிகள் அதிர்ச்சி..!

Published: 24 Jun 2022, 8:30 PM |
Updated: 24 Jun 2022, 8:30 PM |
Posted By: admin

தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரு மடங்கு உயர உள்ளதால் விமான பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலிருந்து அமீரகம், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் பணிக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் உள்பட பலர் விமானங்களில் பயணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை இருப்பதால் அதிக அளவு பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென சென்னை உள்பட தமிழகத்தில் இருந்தும், தென் இந்தியாவில் இருந்தும் அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணம் திடீரென 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

சென்னை -அபுதாபி, கொச்சி – துபாய், திருவனந்தபுரம் – துபாய் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கு இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஜூலை முதல் வாரத்தில் இருந்து இந்த புதிய கட்டணம் அமலுக்கு வர இருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக பகுதியில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாகவும், கட்டணம் உயர்வு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையிலிருந்து துபாய்க்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தினமும் ஏழு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வெறும் 2 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதும் விமான கட்டணம் உயர்வுக்கு காரணம் என்ற பயண முகவர்கள் கூறுகின்றனர்.