ADVERTISEMENT

UAE: போர்டிங் பாஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம்.. பயணிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

Published: 24 Jun 2022, 5:56 PM |
Updated: 24 Jun 2022, 5:56 PM |
Posted By: admin

அமீரக விமான நிலையத்தில் இருந்துக்கொண்டு பயணிகள், போர்டிங் பாஸின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று போலிசார் எச்சரித்துள்ளனர். ஒரு பிரபல நபர் தனது பயணத் விவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர் அவரது விவரங்கள் அனைத்து திருடப்பட்டதாக் காவல்துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக, துபாய் காவல்துறையின் சைபர் கிரைம் தடுப்புத் துறையின் இயக்குநர் கர்னல் சயீத் அல் ஹஜ்ரி, போர்டிங் பாஸ்களில் பார் குறியீடுகள் மற்றும் பிற தகவல்கள் உள்ளன. இதன் மூலம் அடையாளத் திருட்டு மற்றும் குற்றங்களைச் செய்ய கும்பல்கள் இந்த தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

“பலர் தாங்கள் முதல் வகுப்பில் அல்லது வணிக வகுப்பில் பயணிப்பதைக் காட்டிக் கொள்ளவும், தங்களுடைய போர்டிங் பாஸின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டும் வருகின்றனர். குற்றவாளிகள் தங்கள் தனிப்பட்ட தரவை அணுக முடியும் என்பதை இந்த பயணிகள் உணரவில்லை, சில குடியிருப்பாளர்கள் தங்கள் பயணத் திட்டங்களைப் பற்றிய விவரங்களை சமூக ஊடக வீடியோக்களில் பகிர்ந்து கொண்டு உள்ளனர், சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே அவர்கள் இதைச் செய்கிறார்கள்” என்று கர்னல் அல் ஹஜ்ரி கூறினார்.

ADVERTISEMENT

தனிப்பட்ட தகவல்களைப் பெற கும்பல்கள் எந்த அளவிற்குச் செல்ல முடியும் என்பதை பலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். “எனவே பயணிகள் தங்கள் தனிப்பட்ட தரவு, போர்டிங் பாஸ் படங்கள் அல்லது பயணத் திட்டங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம்” என்று கர்னல் அல் ஹஜ்ரி கேட்டுக்கொண்டார்.