ADVERTISEMENT

உங்கள் UAE ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகிவிட்டதா? விண்ணப்பிப்பது எப்படி..? முழு விபரம் உள்ளே..!

Published: 10 Jun 2022, 12:35 PM |
Updated: 10 Jun 2022, 12:37 PM |
Posted By: admin

உங்கள் UAE ஓட்டுநர் உரிமம் காலாவதியாவிட்டதா? விண்ணப்பிப்பது எப்படி..? இதோ சில நிமிடங்களில் ஆன்லைன் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

உங்கள் ஓட்டுநர் உரிமம் பல ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியதாகி இருந்தால் செய்ய வேண்டியது என்ன?

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான ஆன்லைன் சேவையைக் கொண்டுள்ளது, RTA-வின் அறிக்கைப்படி, ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியானால், விண்ணப்பதாரர் சாலை சோதனையில் தேர்ச்சி பெற்ற பின்னரே அதைப் புதுப்பிக்க முடியும்.

ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிய பின் தாமதாமாக புதுப்பித்தால் என்ன ஆகும்?

தாமதமாக புதுப்பித்தலுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்:

ADVERTISEMENT

RTA படி, 10 ஆண்டுகளுக்கும் குறைவான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதலில் தாமதம் ஏற்பட்டால் மாதத்திற்கு 10 திர்ஹம்ஸ் அபராதம் ஆகும், மேலும் அதிகபட்சமாக 500 திர்ஹம்ஸ் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவருக்கு அபராதம் விதிக்கப்படும்.

உங்களது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான செயல்முறைகள் இதோ..

  • துபாயில் உள்ள ஓட்டுநர் நிறுவனத்திற்குச் சென்று உங்கள் விவரங்களை தெரிவிக்கவும். நீங்கள் வாகனம் ஓட்டிய தரவுகள் சரிபார்க்கப்பட்டு, ஓட்டுநர் அனுபவத்தைப் பொறுத்து, சாலைப் பரிசோதனை எடுப்பக்கப்படும். அப்போது குறிப்பிட்ட தேதியில் ஓட்டுநர் சோதனைக்கு முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படும்.
  • கண் பரிசோதனை – அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செயல்முறையின் ஒரு பகுதியாக கண் பரிசோதனை எடுக்கப்படும்.
  • ஓட்டுநர் சோதனை – உங்களுக்கு ஓட்டுநர் சோதனைக்கான தேதி வழங்கப்படும். ஓட்டுநர் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தவுடன், ஆன்லைனில், RTA மையத்தில் அல்லது ஓட்டுநர் நிறுவனத்தில் நீங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்.

செலவு

RTA வழங்கிய விவரங்களின்படி, ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருந்தால், ஒரு நபர் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணங்கள் இவை:

ADVERTISEMENT
  • ஓட்டுநர் பயிற்சி: 200 திர்ஹம்ஸ்
  • விண்ணப்பம்: 100 திர்ஹம்ஸ்
  • (Handbook Manual) கையேடு: 50 திர்ஹ்ம்ஸ்
  • RTA சோதனைக் கட்டணம்: 200 திர்ஹ்மஸ்
  • டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால் 500 திர்ஹம்ஸ்
  • ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம்: 300 திர்ஹம்ஸ்
  • Knowledge and Innovation கட்டணம்: 20 திர்ஹம்ஸ்

மொத்த செலவு: 1,370 திர்ஹ்ம்ஸ்.

ஆன்லைனில் ஓட்டுநர் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தல்:

  1. RTA இணையதளத்தில் உள்நுழையவும் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி கணக்கை திறக்கவும்.
  2. ஆன்லைன் சேவையை இதில் பார்வையிடவும்: https://www.rta.ae/wps/portal/rta/ae/home/rta-services/service-details?serviceId=3704299&lang=en
  3. ‘Apply now’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் உங்கள் traffic file எண்ணை உள்ளிட வேண்டும், அதைத் தொடர்ந்து புதுப்பித்தல் விண்ணப்பத்திற்கான போர்ட்டலுக்கு நீங்கள் லோடிங் ஆகும்.
  5. தேவையான ஆவணங்களைப் அப்லோட் செய்யவும்.
  6. கட்டணம் செலுத்தவும்.
  7. அசல் உரிமத்திற்காக காத்திருக்கும் போது அச்சிட்ட மின்னஞ்சல் மூலம் தற்காலிக ஓட்டுநர் உரிமம் இரண்டு அலுவகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து உங்களுக்கு கிடைக்கும்.
  • டெய்ரா அல்லது அல் பர்ஷாவில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள். (கூரியர் மூலம், கூடுதல் கட்டணமாக 25 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படும்).