ADVERTISEMENT

அமீரகத்தில் அசத்தும் இந்திய பள்ளி.. கோல்டன் விசாவுக்கு தகுதிபெற்ற 49 மாணவர்கள்..!

Published: 30 Jun 2022, 6:23 PM |
Updated: 30 Jun 2022, 6:23 PM |
Posted By: admin

அமீரகத்தில், கேரளா போர்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு இந்தியப் பள்ளி உயர்நிலைத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் அசத்தியுள்ளனர். அபுதாபியில் உள்ள இந்திய மாடல் பள்ளியில் அனைத்து 107 மாணவர்களும் 2021-2022 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளியைச் சேர்ந்த 49 மாணவர்கள் அமீரகத்தின் கோல்டன் விசாவிற்கு தற்போது தகுதி பெற்றுள்ளனர் என்று பள்ளி முதல்வர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

“107 மாணவர்களும் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்களில் 49 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதைச் சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மாணவர்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதாவது 1,200-க்கு 1,140 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்” என்று அவர் கூறினார்.