ADVERTISEMENT

UAE: சாலை விபத்துகளை தடுக்க ALERT TRAILER அறிமுகம்..!

Published: 27 Jun 2022, 7:51 AM |
Updated: 27 Jun 2022, 7:51 AM |
Posted By: admin

ஷார்ஜா போக்குவரத்து விபத்துக்களை குறைக்க காவல்துறை ‘ALERT TRAILER’ என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்ததிட்டத்தை ஷார்ஜா காவல்துறையின் அமீரக பணியாளர்கள் தயாரித்ததாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் கர்னல் முஹம்மது அலை அல் நக்பி கூறுகையில், “இந்த ALERT TRAILER தனித்துவம் வாய்ந்த போக்குவரத்து விபத்து, கனரக வாகனம் சேதமடைதல், தீ விபத்து போன்றவற்றின் போதுமூடப்பட்ட சாலைகளில் இருக்கும் போக்குவரத்து ரோந்துப் பணிகளுக்குப் பதிலாக இந்த ALERT TRAILER பயன்படுத்தப்படும். வாகனங்களில் சூரிய சக்தி விளக்குகள் இருப்பதால், தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளை எச்சரிக்க இந்த TRAILER உதவும்என்று அவர் கூறினார்.