ADVERTISEMENT

UAE: வாகன ஓட்டிகளே கவனம்.. இனி இங்கே வாகனத்தை நிறுத்தினால் 2,000 திர்ஹம்ஸ் அபராதம்..!!

Published: 7 Jun 2022, 9:16 PM |
Updated: 7 Jun 2022, 9:16 PM |
Posted By: admin

சாலையில் செல்ல கூடிய வாகனங்களின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிப்பதாலும் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாலும், வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை நிறுத்த பேருந்து நிறுத்தங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் (ITC) வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் இந்த போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 2,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (ITC) இன்று செவ்வாய்க்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் அறிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் பேருந்து நிறுத்தங்களை பயணிகளுக்கு பிக் அப் அல்லது டிராப் பாயிண்டாக பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்திருந்த ITC, இதற்கு முன்னரே பேருந்து நிறுத்தங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் இறக்குவதற்கும் பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்துமாறும் வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தியும் வந்தது.

ADVERTISEMENT

எனினும், பேருந்து நிறுத்தங்களை வாகன ஓட்டிகள் தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 2,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT